பரோட்டா சாப்பிட்டதால் உயிர் போய்விட்டதா?

பரோட்டா சாப்பிட்டதால் உயிர்  போய்விட்டதா :

மனைவியுடன் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட புதுமாப்பிள்ளை தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்.35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த சண்முகசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இருவரும் சந்தோஷமாக புதுச்சேரியில் குடும்பம் நடத்தி வந்தார்கள்.

சண்முக சுந்தரி தன் பெற்றோரை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவரை கடந்த வாரம் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்தார் புருஷோத்தமர்.

புதிதாக திருமணமானவர்கள் என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியுடன் செல்போனில் பேசுவது புருஷோத்தமனின் பழக்கம்.
இந்த நிலையில் புருஷோத்தமன் வேலைக்கு சென்று விட்டு வரும் போது இரவு உணவுக்கும் பரோட்டா வாங்கி வந்துள்ளார்.

வழக்கம்போல மனைவியுடன் பேசிக் கொண்டே சாப்பிட அமர்ந்திருக்கிறார் பரோட்டாவை பிய்த்து வாயில் வைத்ததும் புருஷோத்தமனுக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கொண்டு இருந்ததால் தண்ணீர் குடியுங்கள் என்று மறுமுனையில்  சண்முகசுந்தரி கூறியுள்ளார் .

 அதன்பிறகு கணவரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் நிசப்தம் நிலவியது  சண்முகசுந்தரி செல் போன் தொடர்பைத் துண்டித்து விட்டு மீண்டும் கணவருக்கு போன் செய்துள்ளார்.புருஷோத்தமன் செல்போனை எடுக்கவில்லை அதிர்ச்சி அடைந்த உடன் அருகில் இருக்கும் உறவினர்களுக்கு போன் செய்து தங்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறி உள்ளார் சண்முகசுந்தரி

நிலைமையை உணர்ந்த அவர்கள் உடனே புருஷோத்தமனின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார்கள் ஆனால் உள்புறம் தாழிடப்பட்ட கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறார்கள்.

அப்போது புருஷோத்தமன் சாப்பாட்டுத் தட்டு அருகில் தரையில் படுத்து இருந்தது தெரிய வந்தது உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் சாப்பிட்ட நிலையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பரோட்டா தொண்டையில் அடைத்துக் கொண்டதால் தான் புருஷோத்தமன் உயிரை இழந்தார் என்று  காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.