கோவிலில் எலுமிச்சம் பழம் வாங்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா

lemon decoration with god
தமிழகத்தில் பல்வேறு வகையான கலாச்சாரங்களும் மற்றும் தெய்வ நம்பிக்கை பழக்கவழக்கங்களும்  மாறு பட்டு  இருக்கின்றது.

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஏற்ப அவற்றிற்கான பிரசாதங்களும் மற்றும் வழிபாட்டு முறைகளும் மாறுபட்டு இருக்கின்றது.

மேலும் அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு பிரசாதமாக எலுமிச்சம் பழத்தை கொடுப்பார்கள்.

அந்த எலுமிச்சம் பழத்தை கடவுளின் அருள் பெற்றதாக கருதி அதை வீட்டில்  பெரியவர்கள் வைத்துக் கொள்வார்கள் .

lemons
ஒரு சிலர் வாகனங்களில் வைத்தால் எந்த அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் நம்பிக்கையால் வாகனங்களில் வைப்பதும் உண்டு.

கோவிலில் வாங்கப்படும் எலுமிச்சம்பழத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்து வீண் அடிப்பார்கள் .

இப்பழத்தை வைத்து என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோயிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலுமிச்சம்பழத்தை வாங்கும் பொழுது அது அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அதை சாறு பிழிந்து சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம் ஆனால்  உப்பு மட்டும் கலந்து குடிக்கக் கூடாது.

கோவிலில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம் பழத்தை வைத்து கண்டிப்பாக திஷ்டி சுத்தி போடக்கூடாது.

lemons
வீட்டில் அல்லது கடைகளில் வாங்கிய எலுமிச்சை பழத்தை  வைத்து திருஷ்டி சுத்திலாம் தவிர பிரசாதமாக வாங்கிய பழத்தை வைத்து திருஷ்டி சுத்தி போடக்கூடாது.

கோவிலில் வாங்கிய எலுமிச்சம் பழத்தை நமது வீட்டில் பூஜையறையில்  வைத்து வழிபடுவது வீட்டிற்கு கடவுளின் அருள் பார்வை  மற்றும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும்.

No comments

Powered by Blogger.