உடலைக் குறைக்க பட்டினி இருக்கிறீங்களா அப்போ உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்

starving diet problem
நாம் உடலை குறைப்பதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றோம் அதில் ஒரு சில பேர் பட்டினி கிடந்தால் உடனே சீக்கிரமாக குறைக்கலாம் என்று எண்ணி சாப்பிடாமல் இருப்பார்கள்.

சாப்பிடாமல் இருப்பதினால் உடல் அளவில் மட்டுமின்றி மனதையும் சோர்வு நிலை தருகின்றது.

நாம் சாப்பிடாமல் பட்டினி இருப்பது பல்வேறு நிலைகளில் இருந்தாலும் அதனால்  உடலில் சில  உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றது.

starving tiet
நாம் சாப்பிடாமல் பட்டினி இருப்பதினால் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுகின்றது இதனால்   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

உணவு பற்றாக்குறை காரணமாக நீர் சத்து குறைபாடு ஏற்படுகின்றது இந்தக் குறைபாடு ஏற்படுவதனால் உடலில் சரும வெடிப்புகள் உண்டாகின்றன மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட காரணமாகவும் இருக்கின்றது.

பெண்கள் சாப்பிடாமல் பட்டினி இருந்து உடலை குறைக்க விரும்பினால் பல்வேறு பிரச்சனை உண்டாகும் அதில் முக்கியமானது மாதவிடாய் சுழற்சி பிரச்சனை ஏற்படும்.


diets
மேலும் சாப்பிடாமல் பட்டினி டயட் இருக்கும்பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் காரணம் என்னவென்றால் உடலில் கழிவுகள் வெளியேற்றப்படும்  வேதிப்பொருள்களின்  முக்கி பங்கு மலமிலக்கிகள் வகிக்கிறது இதற்கு தேவையான ஊட்டச்சத்து குறைவு காரணமாக வேலை செய்யாமல் போவதால் உடலில் பல்வேறு பிரச்சனை உண்டாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.