விஷ்ணு ஆலயத்தில் துளசி தீர்த்தம் கொடுப்பதன் காரணம் தெரியுமா

perumal
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவுக்கு துளசி பிரசாதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் நம் வீடுகளில் துளசி மாடம் அமைத்து வழிபடவும் செய்வோம்.

விஷ்ணுவுக்கு முக்கியமாக  சங்கு,துளசி,சாளக்கிராமம் ஆகும் இந்த மூன்றின் முறையாக பூஜை செய்பவருக்கு பதினாறு செல்வங்கள் மட்டுமின்றி முக்காலம் உணர சக்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

மேலும் பெருமாளுக்கு துளசியைக் கொண்டு அபிஷேகம் செய்வது மற்றும் துளசி மாலை இடுவது நமக்கு பல்வேறு செல்வங்களைப் பெற்றுத்தரும்.

துளசியை பிருந்தா விஸ்வபாவனி புஷ்ப சாரை என பல்வேறு சிறப்புப் பெயர்களை வைத்து அழைக்கப்படுகிறது.

thulsai
துளசியை வீட்டில் வைத்து பூஜை செய்யும் போது நமக்கும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதனால் மன நிம்மதியுடன் வாழலாம்

துளசி பிறந்ததற்கு புராணம் ஒன்று இருக்கின்றது.

சங்கு விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது மேலும் மகாலட்சுமியின் அம்சமாக துளசி கருதப்படுகிறது.

சங்கு மற்றும் துளசி இவ்விரண்டும் இருக்கிற வீட்டில் அல்லது கடைகளில் எதுவாக இருந்தாலும் இவ்விரண்டும் இருந்தால்  மகாலஷ்மி மற்றும் பெருமாள் அங்கு வாசம் செய்வார்கள் இதனால்  செல்வ கடாட்சம் நிறைந்து இருக்கும்.

vishnu and thulasi
மேலும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபடும்போது துளசி தீர்த்தம் பருகுவதால் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை பெற்றுத் தருகிறது.

மேலும் இது இறைவனுக்கு படைத்து நமக்கு தருவதால் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் நேர்மறையான ஆற்றலை துளசியில் உள்ளடக்கி தீர்த்தமாக பருகுவதன் மூலம் நாமும் அந்த ஆற்றலைப் பெற முடியும்.

No comments

Powered by Blogger.