காகத்திற்கு உணவு அளித்தால் நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுக் கொடுக்குமா..!

crow eating tamil
அமாவாசை தினங்களில் நாம் காக்கைக்கு உணவளித்த பிறகே சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை நாம் பின்பற்றி வந்திருப்போம்.

காக்கை சனியின் வாகனமாக கருதப்படுகிறது .

சனி திசை நடப்பவர்கள் அதிலும் ஏழரை நாட்டுச் சனி,அஷ்டமத்து சனி என்று  நடப்பவர்களுக்கு ஜோசியக்காரர்கள் பரிகாரம் சொல்கையில் காக்கைக்கு தினமும் உணவளித்து வாருங்கள் சுப காரியங்கள் நடக்கும் என்று  கூறுவார்கள்.

இந்தக் காக்கைக்கும் நம் முன்னோர்களின் ஆசிக்கும் எவ்வாறு சம்பந்தம் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

crow benefits
தினமும் உணவு உட்கொள்ளும் முன் ஒரு கைப்பிடி அளவிலான உணவை காக்கைக்கு படைப்பது நமது கடமையாகும் காரணம் என்னவென்றால் நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக ஐதீகம் அதனால் அவர்களின் ஆசியைப் பெற நாம் உணவளிக்க வேண்டும்.

இந்த காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம் கணவன்-மனைவி இருக்கும் சண்டை சச்சரவுகள் குறைந்து அவர்களின் மன மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

sani
காக்கை சனீஸ்வரனின் வாகனமாக இருப்பதால் அதற்கு உணவு அளிப்பதன் மூலம் சனீஸ்வரனின் முழுமையான அருளை நாம் பெறமுடியும்.

எள்ளு கலந்த உணவை சில நபர்கள் வைப்பார்கள் அது நன்மை என்றாலும் அதில் சிறிதளவு தயிர் கலந்து உணவு அளித்தால் அதிக அளவிலான அதிர்ஷ்டத்தை பெற்று தரும்.

வீட்டில் ஒற்றுமை மற்றும் அமைதி உடன் என்றும் நிலைத்திருக்க காக்கைக்கு உணவு அளிப்பதை தவறாமல் செய்யுங்கள்.

No comments

Powered by Blogger.