முகப்பொலிவை மெருகூட்டும் சில அழகு குறிப்புகள்

beauty  face
கற்றாழையில் இருக்கும் ஜெல்லியை  எடுத்து முகத்தில் நன்றாக  தேய்த்துக் கொள்ளுங்கள் பின்  பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போக்கி சருமம் பளபளப்பாக மாறும்.

வெள்ளிரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கும் அதே போல் அதை அரைத்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

papaya facial
பப்பாளிப் பழம் கர்ப்பிணி பெண்கள் தவிர எல்லாரும் சாப்பிடலாம் அதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அதேபோல் பப்பாளிப் பழத்தை வைத்து அழகையும்  மேம்படுத்தலாம் பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தேய்த்து 45 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் முகத்தைக் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறையும் மேலும் இறந்த செல்கள் உயிரோட்டம் பெரும்.

தயிரை தினமும் குடித்து வந்தால் உடல் வெப்பமாவதை தடுக்கும் மேலும் தயிரில் இருக்கும் அமிலமானது சருமத்தில் இருக்கும் கருமை போக்கும் தன்மையை உண்டு.

beauty tips of facial
அதனால் தினமும் இரவில் தூங்குவதற்கு முன் தயிரை எடுத்து கை கால் மற்றும் முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் அழகாக மாறும்.

நம் சமையல் அறையில் இருக்கும் மஞ்சள் தூள் எடுத்து சிறிது பாலை அதனுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து தினமும் ஃபேஸ் பேக் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.

No comments

Powered by Blogger.