அசுரன் படத்தில் தனுஷ் இந்த வேடத்தில் நடிக்கிறாரா..!

asuran second look
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இந்தக் கூட்டணி இணைந்தாலே இந்த படம் வெற்றி என்பதை விட எத்தனை விருதுகள் வாங்கும் என்பதில் தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

இவர்கள் இணைந்த படங்கள் எல்லாமே வெற்றி அது மட்டுமில்லாமல் தேசிய விருதுகள் கவுரவ விருதுகள் என பல்வேறு பரிமாணத்தில்  படத்தில் நடித்தவர்களுக்கு அனைவருக்கும் விருதுகள் கிடைத்துள்ளது.

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகும் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளிவந்துள்ளது.

மேலும் தனுஷ் அசுரன் படத்தில் வயதான தோற்றத்திலும் மற்றும் சின்னப்பையன் போல்  இளிமையாக தோற்றத்தில் என இரு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார் என்பதை இந்த லுக் மூலம் நாம் அறியலாம்.

dhanush asuran look
இந்த லுக் மூலம் மகன் தந்தை போன்ற  கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் இந்த லுக் காணும்பொழுது தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லாது பல திரைப்பட பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.


dhanush
அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் மேலும் பல்வேறு சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை  பிரபல தயாரிப்பாளர் பல்வேறு வெற்றிகளை கொடுத்த கலைப்புலி தாணு  மேலும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆவார்.

இப்படம் வெக்கை  நாவலை தழுவிய கதை என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் தனுஷ் ரசிகர்கள் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் மேலும் இப்படம்  வெற்றி அடைய நாமும் வாழ்த்துவோம்.

No comments

Powered by Blogger.