குழந்தைகளுக்கு ஆபத்தை தரும் சில உணவுகள்..!

baby with eating food
பெற்றோர்கள் குழந்தைக்கு உணவு ஊட்டும் போது சாப்பிடாமல் அடம் பிடிக்கும் அதனால் வீட்டில் இருப்பவர்கள் உணவு சாப்பிடாமல் இருப்பதால்  அதிகமான நொறுக்குத்தீனிகளை வாங்கி  சாப்பிட கொடுப்பார்கள்.

நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால் குழந்தைகளுக்கு வயிற்று மந்தம் நிலை மற்றும் உடல் எடையை அதிகரித்து செல்கின்றது.

மேலும் சில திண்பண்டங்கள் சாப்பிடுவதினால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புற்றுநோய் வரக்கூட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஆய்வில் கூறுகின்றனர்.

 விளம்பரங்களில் அதிகமாக நொறுக்குத்தீனிகள் கண்ணைக் கவரும் வகையில் விளம்பரம் செய்வதால் குழந்தைகளுக்கு அது மிகவும் பிடித்தது போல் காட்சியளிக்கிறது மேலும் அதை வாங்கி சாப்பிடும் போது  புற்று நோய்  மற்றும் செரிமான பிரச்சனை குழந்தைகளுக்கு உண்டாக காரணமாக அமைகின்றது.

popcorn 
குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டங்களில் பாப்கான் ஒன்று இதில் அதிகமான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது மேலும் அதில் PFOA என்னும் நச்சுத் தன்மை இருக்கிறது.

கடைகளில் சிப்ஸ்களை வாங்கி  அதிகம் சாப்பிடுவோம் அதில் காரசினோஜெனிக் என்னும் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கிறது.

Cold drinks
குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுக்கும் போது கவனம் மிகவும் அவசியம் மேலும் அதில் சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்டு இருக்கும் மற்றும்  நீண்டநாள் இருக்கவேண்டி வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கும் அதனால் குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

 வீட்டில்  செய்யப்படுகின்ற உணவை மட்டும் கொடுப்பது மிக சிறந்தது.

No comments

Powered by Blogger.