முருகப் பெருமானின் விரதங்களும் அதற்கான பலன்களும்
![]() |
lord murugan |
தமிழ் கடவுள் முருகன் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.
மனதின் விரதம் இருக்கும் போது தன்னிடம் உள்ள அசுத்தங்களை அகற்றி தூய்மை அடைகின்றது.
![]() |
lord kandha |
சர்வ வல்லமை படைத்த சுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் கோபத்தில் நெற்றிக்கண்ணிண் மூலம் தோன்றியவர்.
சைவ சித்தாந்தம் சொல்லக்கூடிய பதி பசு பாசம் என்ற மூன்றும் அசுர வடிவத்தில் இருந்த சூரன் தாரகாசுரன் சிங்கமுகாசுரன் எனும் இவர்களை அழித்தவர்.
இந்த மூன்று அசுரர்களை அழித்த படலம் "கந்த புராணம்" என்ற நூலில் உள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க முருகப் பெருமானை நோக்கி விரதம் இருப்பது நமக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
![]() |
kantha sasti kavasam |
விரதம் இருக்கையில் பதி பசு பாசம் தவிர ஆறுவகை எதிரிகளான காமம் கோபம் பேராசை மயக்கம் பெருமை செருக்கு இவற்றை எல்லாம் அழித்து இறை உணர்வை தூண்ட செய்கின்றது.
இந்த விரதத்தை எல்லாரும் அனுஷ்டிக்கலாம் இதற்கு அவரவர் தன்மைக்கேற்ப விரதத்தின் பலன்கள் அமைகின்றது.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட்டு நாமும் அருளைப் பெறுவோம்.
Leave a Comment