எல்லா விதமான நோய்களுக்கும் தீர்வு தரும் அற்புத மருந்து

benefits of fennel flower
நம் உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்கும்  அருமருந்தாக இருப்பதோடு இல்லாமல் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய ஒரு சிறிய பொருள் என்னவென்றால் கருஞ்சீரகம்.

இந்த கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு நாம் உபயோகப்படுத்தலாம் மேலும் இந்தப் பதிவிலும் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சொரியாஸிஸ் நோய் உள்ளவர்களுக்கு இந்த கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்து குளிப்பதனால் நோயின் தாக்கம் சிறிது குறையும்.

நம் உடலில் தழும்பு மற்றும் புண்கள் எதுவாக இருந்தாலும் இப்பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வர தழும்புகள் மறையும்.

இந்த கருஞ்சீரகத்தின்  "தைமோகியோனின்" என்ற வேதிப் பொருட்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும்.

மேலும் கருஞ்சீரகம் பயன்படுத்துவதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பினை குறைத்து ஒவ்வாமையை நீக்கிறது.

fennel flower
ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு ஏற்படும் அதை நீங்க கருஞ்சீரகத்தை பொடி செய்து அதில் 25ml நல்ல எண்ணெய் கலந்து சூடு செய்து அதை வடிகட்டி மூன்று சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகப் பொடியை சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு தேனை கலந்து  அருந்தினால் உடலில் இருக்கும் சிறுநீர் பிரச்சினைகள் அதாவது சிறுநீர் கற்கள் இருந்தால் கரையும் மேலும்  இதை இரு வேளைகளில் உட்கொண்டு வரலாம்.

health benefits of fennel flower
வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு உப்புசம் உள்ளவர்களுக்கு அந்த கெட்ட கழிவு நீக்குவதற்கு இந்த கருஞ்சீரகத்தின் பயன்படுத்தலாம்.

புற்று நோய்க்கு அருமருந்தாக கருஞ்சீரகம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.