சாபங்களைத் தீர்க்க சிறப்பான பரிகாரம்

lord durga
பொதுவாகவே 13 சாபங்கள் இருக்கின்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 எந்த காரணத்தினால் சாபம் கொண்டாலும் அதற்கான தீர்வு தரும் சிறப்பான பரிகாரங்களை செய்தால் அந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று இந்தப் பதிவில் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பெற்றோர்களால் ஏற்பட்ட சாபதிற்கு பௌர்ணமி அடுத்த பிரதமை திதியில் சிவபெருமானின் காவலராக இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அந்தப் பாவத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

sandikeswarar 
இந்த பரிகாரம் செய்யும் பொழுது சண்டிகேஸ்வரரை எந்த ஒரு தடங்கலும் செய்யாமல் அவர் சன்னதியின் முன் அமர்ந்து தியானம் செய்து பாவங்கள் போகும் படி வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு அவருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

சுமங்கலியால் ஏற்பட்ட சாபங்களை நீக்குவதற்கு சிவபெருமானின் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியை பிரதமை அடுத்துவரும்  திருதியை திதியில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

இந்த நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது எனது பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

சகோதர சாபம் விலக வேண்டுமானால் அஷ்டமி திதியில் பைரவருக்கு வழிபாடு செய்யுங்கள்.

bairavar
பைரவர் வழிபாடு செய்தால் சகல விதமான பாவங்கள் தோஷங்கள் இருந்து நாம் விடுபடலாம்.

பாவத்திற்கான பரிகாரங்களை செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம் மேலும் பரிகாரம் செய்தால் பாவங்கள் குறையும் என்று கருதி மேலும் தவறுகளை செய்யாதீர்கள்.

No comments

Powered by Blogger.