பலாப்பழத்தில் இருக்கும் ஆரோக்கியமும் மற்றும் கெடுதல் பற்றியும் பார்ப்போம்

jackfruits
பலாப்பழத்தை  விரும்பி சாப்பிடாதவர் எவரும்  இல்லை அந்த அளவிற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய பழமாகும்.

இதில் பல்வேறு வகையான சத்துக்களும் மற்றும் வைட்டமின்களும் இருக்கின்றது அது எவ்வகை நமக்கு நன்மை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பலாப்பழம் சாப்பிட்டால் நம் உடலில்   மலச்சிக்கலை பெருமளவில் குணப்படுத்தும் தன்மை உண்டு ஆனால் பலாப்பழத்தின் சுவை பிடித்திருக்கிறது என்று விரும்பி  அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

stomach problem
வைட்டமின்களில் ஏ,பி மற்றும் சி சத்துக்கள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.

மேலும் இதை அளவோடு சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நரம்பு மண்டலத்தை வலிமை செய்கின்றது மேலும் ரத்த அணுக்களை விருத்தி செய்கின்றது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இதற்கு பொருந்தும் ஏனென்றால் இதை அளவுக்கு மீறி நாம் உட்கொண்டால் நம் உடலை பாதிப்புக் ஏற்படுத்தும்.

jack fruits benefits
இது அதிகமாக சாப்பிடும்போது வயிற்று மந்தமாகிவிடும் அதனால் வாந்தி மற்றும் வலியை உண்டாகும் என்று  கூறுகின்றனர்.

பலாப்பழத்தை பிஞ்சில் இருக்கும் போது அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் செரிமான தன்மையை குறைத்து வயிற்று வலி மற்றும் மந்தமாக இருப்பது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

பலாப் பழத்தை அளவோடு சாப்பிட்டால் அதிக நன்மையும் அளவுக்கு மீறினால் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

No comments

Powered by Blogger.