இணையத்தில் லீக்கான பிகல் படப் பாடல் அதிர்ச்சியில் திரையுலகினர்

bigil film with actor vijay
இளைய தளபதி விஜய் நடித்து உருவாகும் பிகில் படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.

ராஜா ராணி தெறி மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லி மீண்டும் தளபதி விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கிவருகிறார் இந்தப் படத்தில் பாடலாசிரியர் ஏ.ஆர். ரகுமான் ஆவார்.

இந்தப் படத்தின் சுவாரஸ்யமான இரு கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார்.

மேலும் தளபதிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார் இவர்களுடன் யோகி பாபு விவேக் டேனியல் பாலாஜி ஆனந்தராஜ் போன்ற பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகும் இப்படத்தின் பட்ஜெட் என்று கணக்கிட்டால் கிட்டத்தட்ட 150 கோடி என்று சொல்கின்றனர்.


இப்படம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கையில் வருகிற தீபாவளி பிகில் தீபாவளி ஆக இருக்கும் என்று கூறி உள்ளனர்.


Bigil film and singapenny song
இந்தப் படத்தின் முதல் பாடல் "சிங்கப் பெண்ணே"  இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்பார்க்கும் பிகில் படத்தின் மற்றொரு பாடல் இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் இப்பாடல் "வெறித்தனம்" என்று ஆரம்பித்து இணையத்தில் கலக்கி வருகின்றது.

வெறித்தனம் என்ற பாடல் வெறித்தனமாக இருப்பதால் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

bigil film act with vijay,music a.r.rahuman,director atlee
இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் முதல் முறையாக தளபதி விஜய் பாடியிருக்கிறார்.

மேலும் இதை இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இப்படத்தின் பாடல் வெற்றியை  போன்று படமும் வெற்றி அடைய நாமும் வாழ்த்துவோம்

No comments

Powered by Blogger.