நெஞ்சு சளியை விரட்டும் மருத்துவ குறிப்புகள்

cold 
நம் உடலில் இருக்கும் நாள்பட்ட சளியானது காச நோயாகக் மாற்றக்கூடிய தன்மை உண்டாகும்.

உடலில் அதிக சளி இருந்தால் உடலில் அதிகமான கிருமிகள் இருக்கின்றது என்று அர்த்தம்.

சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையே போக்குவதற்கு எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

தினமும் இருவேலை சிறிதளவு தூதுவளை இலையை மென்று தின்றால் இந்தப் சளி பிரச்சனையை குறைத்து வரலாம்.

solanaceae
மேலும் தூதுவளையை தினமும் உட்கொண்டு வந்தால் ஆயுள் அதிகரிக்க செய்யும்.

சிறிதளவு தூதுவளையை எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை பனங்கற்கண்டு கலந்து ஒண்டறை கிளாஸ் நீர்விட்டு அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விடவும் மேலும் கொதித்து வந்தவுடன் வடிகட்டி குடித்து வர சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

musumusukai leaf
முசுமுசுக்கை இலையை சாப்பிடும்போது உடல் உஷ்ணம் குறைக்கிறது மேலும் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.

கடுகு மற்றும் சிறிதளவு தேனை பயன்படுத்தி சளி காய்ச்சல் இருமல் மற்றும் உடல் வலிகளை குணப்படுத்தலாம் எப்படி என்றால் சிறிதளவு கடுகு எடுத்துக் கொள்ளுங்கள் அதை பொடியாக நறுக்கி அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடுங்கள் கொதித்து வந்தவுடன் அது சுத்தமான தேனைக் கலந்து சாப்பிட்டு வாருங்கள் இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலே சொன்னது போல் உடல் வலிமை பெறும்.


இந்த ஆரோக்கியமான குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments

Powered by Blogger.