வியந்து பார்க்க வைக்கும் அதிசிய குகைக் கோயில்!
This is the ellora temple top view |
அப்படி ஒரு கட்டிடம் எல்லோரா கைலாய நாதர் சிவன் கோவில் ஆகும்.
மகாராஷ்டிரா அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட குகை கோயில் உள்ளது அதில் பதினோராவது குகைக் கோவில் கைலாசநாதர் கோவில் ஆகும்.
இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் முதலாவது கிருஷ்ணர் மன்னனால் கட்டப்பட்டது என்றாலும் தற்போதைய மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகும்.
இந்தக் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பட்டது அல்ல.
அதற்கு மாறாக ஒரு முழு மலையையே மேற்பகுதியிலிருந்து அப்படியே செதுக்கி பிரம்மாண்டமான வடிவில் உருவம் செதுக்கியது.
இதுவரை உலகில் உள்ள குகைக் கோவில்கள் அனைத்தும் முன்புறத்தில் செதுக்கி உருவாக்கப்படுகின்றன ஆனால் மாறாக இந்த கோவில் மலை உச்சியில் தொடங்கி கீழ்நோக்கி கட்டியுள்ளார்கள்.
this is inner view of ellora pillar |
இவ்வாறு குகை கோயில் முழுவதும் கிட்டத்தட்ட 4 லட்சம் பாறையை வெட்டி அப்புறப்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டு உள்ளார்கள்.
இது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி னால் கூட இதைக் கட்டுவதற்கு 30 ஆண்டுகள் கூட சாத்தியமில்லை என்றால் அக் காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று.
this is other top view of ellora temple |
- இங்குள்ள இணைப்புப் பாலம்
- மழைநீர் சேகரிப்புத் தொட்டி
- வடிகால்கள்
- எண்ணிலடங்காத குகைகள்
- சிற்ப வேலைப்பாடுகள்
- நுட்பமாக செய்யப்பட்ட பால்கனி அமைப்புகள்
நேர்த்தியான அமைப்பு கொண்ட படிக்கட்டுகள் என அனைத்தும் முன்கூட்டியே தீர்மானித்து முழு மலைப்பாறையை மேலிருந்து கீழாக செதுக்கி வடிவமைப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம் ஆகும்.
Leave a Comment