தேன் சாப்பிட்டால் ஆபத்தா என்னையா சொல்றீங்க

health issue of honey
இயற்கை அன்னை பலவிதமான ஆரோக்கியமான பொருட்களை நமக்கு பரிசாக கொடுத்து உள்ளது அதில் முக்கியத்துவம் வாய்ந்த தேனை  பற்றித்தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

தேன் ஒரு சிறந்த உணவுப்பொருள் மட்டுமின்றி அருமருந்தாக இருக்கிறது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிகிச்சை முறைகளில் தேன் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும் மருந்து பொருளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல்லுக்கேற்ப பல பக்க விளைவுகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

honey
தேனை பதப்படுத்தாமல் அப்படியே உட்கொள்ளும் போது வாந்தி மற்றும்  ஃபுட் பாய்சன் வர வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

பிறந்த குழந்தை  முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைக்கு தேனை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.

இது போட்யூலிசம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் மேலும்  காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அதிகமாக தேனை உட்கொள்ளும்போது வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படலாம் மேலும் சிறு குடலில் இருக்கும் ஊட்டச்சத்து உறுஞ்சும் தன்மையை பாதிப்பு ஏற்படும்.

honey
பதப்படுத்தாமல் இருக்கிற தேனை உட்கொள்ளும் போது உங்கள் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதில் தேனீயின் கொடுக்குகள் மற்றும் இரசாயனங்கள் இருக்க  வாய்ப்பு  உள்ளது.

இந்த தேனை அதிகளவு உக்கொள்வதால் கடுமையான ஒவ்வாமை ஏற்படும் மற்றும் அனாபிலாக்டிக் நோய் கூட ஏற்படலாம்.

உடல் பருமன் வர தேனை அதிகம் உட்கொள்வதால்  கூட காரணமாக இருக்கலாம்.

No comments

Powered by Blogger.