குளிகை நேரத்தில் எதை செய்யக் கூடாது

time period
time 
காலண்டரில் தினமும் எமகண்டம், நல்லநேரம்,கௌரி நல்ல நேரம் இருக்கிற மாதிரி குளிகை நேரமும் நம்மால் பார்க்க முடியும்.

நம் வீட்டில் நடக்கக் கூடிய எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும்  நம்முடைய பெரியவர்கள்  உடனே எமகண்டம் குளிகை நல்ல நேரம் மற்றும்  பஞ்சாங்கம் முதலில் எடுத்து பார்ப்பார்கள்.

இந்த குளிகை  நேரத்தில் செய்யக்கூடிய ஒரு செயலானது அது வளர்ந்து கொண்டே போகும்.

kuligai neram
இறந்தவர் உடலை எடுக்கும் போதும் மற்றும் சில காரியங்களை செய்யும் போதும் குளிகை நேரத்தில் செய்தால் அது திரும்பத் திரும்ப நம் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும் அதனால் ஒரு சில விஷயங்கள் அந்த நேரத்தில் செய்யக்கூடாது எனப்  பெரியவர்கள் சொல்வார்கள்.

எதை செய்யக் கூடாது
  •  கடன் வாங்குவது போன்ற செயல்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.
  •  பெண் பார்க்க செல்வது 
  • வாழ்க்கையில்  சுபகாரியம் ஒவ்வொருத்தருக்கும் மிக முக்கியமானது என்னவென்றால் திருமணம் ஆகும் இந்த திருமணத்தை நல்ல நேரத்தில் அல்லது கௌரி நல்ல நேரத்தில் செய்யும்போது அது நல்ல சுப நிகழ்ச்சியாக அமையும் ஆனால்  குளிகை   நேரத்தில்  செய்யும்போது அந்த செயலானது திரும்பத் திரும்ப நம் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும்.
  • சுப நிகழ்சிகள் குளிகை நேரத்தில் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.
தர்ப்பணம் கொடுப்பது 

  • நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூடிய மிக முக்கியமான காலம்  அதிகாலை ஆகும்.
  •  ஒரு சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களால் அதிகாலை கொடுக்க முடியாமல் போனால்   குளிகை நேரம் முடிந்த பிறகு கொடுப்பது சிறப்பு.
குளிகை நேரத்தில்  என்ன  செய்ய வேண்டும் 
  •  கடனை திருப்பிக் கொடுக்கலாம்.
  • வீடு நகை சொத்து வாங்குவது வீட்டிற்கு புதிதாக ஏதாவது ஒரு பொருள் வாங்குவது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்வது இந்த மாதிரி சுபநிகழ்ச்சிகளை இந்த குளிகை நேரத்தில் செய்வது மிகவும் உகந்தது.

No comments

Powered by Blogger.