உங்க முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா இதோ அதற்கான எளிய தீர்வு

beauty tips for face

நமது தோற்றம் அழகாய் இருந்தால் மற்றவர்களின் கவனம் நம் மீது ஈர்க்கும் அதனால்  தோற்றத்தை அழகாக வைத்திருக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

அதன் வகையில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எளிய தீர்வை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

 சூரியனிடம்  வரும் புறஊதா வெப்ப கதிர்களால்  நம் முகத்தில் கருமை புள்ளிகள் வருகின்றது இதற்கு மிக எளிமையான தீர்வு தக்காளி ஆகும்.

இந்த கரும்புள்ளிகளை நீக்குவதற்கு விலை உயர்ந்த க்ரீம் மற்றும் லேசர் ட்ரீட்மென்ட் போன்ற மருத்துவத்தை பயன்படுத்துவதை தவிர்த்து  இயற்கை முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

சில நபர்களுக்கு முகத்தில் சிறு  துளைகள் போன்று இருப்பதை காணலாம் அவற்றை சரி செய்ய தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வாருங்கள் நாளடைவில் அந்த துளைகள் சுருங்கி சரியாகிவிடும்.

pimple face
முகத்தில் பருக்கள் இருந்தாலும் அதனை நீக்க தக்காளியை கூல் போல் அரைத்து அதனை முகத்தில் தடவி வந்தால்   பருக்கள் நீங்கும் மீண்டும் வராமல் பாதுகாக்கும்.

சருமத்தில் எண்ணெய்   இருந்தால் தக்காளியுடன் சிறிதளவு வெள்ளரிக்காய் நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள் அதை ஒரு துணியில் கலந்து மசாஜ் போல் செய்து வாருங்கள் இதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய்  கட்டுப்படுத்தி மீண்டும் கசியாமல் வைத்துக்கொள்ளும். 

tomato
தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவை அடையலாம்.

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆனது நம் முகத்தோற்றத்தில் பொலிவை ஏற்பட  செய்கிறது.

No comments

Powered by Blogger.