செல்வத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய மகாலட்சுமி விரதம் இருப்பது எப்படி

mahalakhsmi
செல்வத்திற்கு அதிபதி  என்றால் மகாலட்சுமி ஆவாள் அவர்கள் அருள் கிடைத்தால் மட்டுமே நம் செல்வத்தை ஈர்க்க முடியும்.

அதேப் போல் சகல விதமான சௌபாக்கியங்களும் கொடுக்கக்கூடிய அன்னை மகாலட்சுமிக்கு விரதம் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

விரதம் கடைப்பிடிக்கும்போது மனது முழுவதும் இறை சிந்தனையில் நினைத்திருக்க வேண்டும்.

விரதத்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்கலாம்.

ஆடி மாதத்தில் விரதம் இருந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டால் செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்கள்.

pooja
மேலும் ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளி அன்று மகாலஷ்மி பூஜை செய்வதன் மூலம் சிறந்த நற்பலன்களை நாம் அடைய முடியும்.

இந்த தினத்தன்று பூஜையறையில் விளக்கேற்றி நெய்வேத்தியம் வைத்து அவர்களுக்கான மூல மந்திரத்தை உச்சரித்து உங்களால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.
lakhsmi
விரதம் இருக்கையில் புராணங்கள் மற்றும் துதிகளை படித்து அன்றைய மாலைப்பொழுதில் சுமங்கலிப் பெண்களை வீட்டில் அழைத்து பிரசாதத்தை வழங்குவதன் மூலம் தெய்வீக நற்பலன்கள் நமக்கு கிடைக்கும்.

வயது முதிர்ந்தவர்கள்  விரதம் இருக்கும்போது பழங்களை சாப்பிடலாம் அதேபோல் சர்க்கரை வியாதி  இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

மகாலட்சுமியின் விரதத்தைக் கடைப்பிடித்து நாமும் அவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

No comments

Powered by Blogger.