மருதாணியின் மருத்துவ குணங்கள்

henna plant
மருதாணி இயற்கையின் குளிர்ச்சி மிகுந்த பொருள் ஆகும் இதை பயன்படுத்தினால் நம் உடலில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

மருதாணி இலையை அரைத்து தலையில் தடவினால் முடி கருமை நிறமாக இருக்கும்.

மருதாணி இலையை அரைத்து கையில் பூசிக்கொண்டால்  குளிர்ச்சியாக இருக்கும்.

மேலும் மருதாணியில் உள்ள பூக்களை கொய்து நான் தூங்க செல்வதற்கு முன் தலையின் அடியில் பூக்களை வைத்துக் தூங்கினாள் நன்றாக தூக்கம் வரும்.

henna plant
மேலும் மருதாணி செடியில் உள்ள பட்டை எடுத்து நன்றாக தண்ணீரில் ஊற விட்டு பிறகு வாரம் இருமுறை என தேன் கலந்து அந்த ஊரிய தண்ணீரை குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

மருதாணி இலையுடன் அவுரி என்னப்படும் செடியின் இலையையும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பிறகு நம் தலையின் முடியில் தேய்த்து வந்தால் முடி கருமை நிறமாக இருக்கும் வெள்ளை முடி உடையவர்கள் கருமை நிறம் பெற இது உங்களுக்கு பெரிதும் உதவும்.

நம் உடலில் தேமல் மற்றும் படை உள்ளவர்களுக்கு மருதாணி இலை மற்றும் வெங்காயம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து பிறகு  அதை தேமல் இருக்குமிடத்தில் தடவி பிறகு குளித்தால் விரைவில் குணமடைய செய்யும்.

henna plant and coconut oil
உடல் வெப்பம் ஆனவர்கள் அந்த சூட்டை குறைப்பதற்கு மருதாணி இலையை வாரம் ஒருமுறை என அரைத்து தலையில் தடவி வந்தால் உடல் வெப்பம் இன்றி குளிர்ச்சியடையும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும் அதனை சரி செய்வதற்கு மருதாணி இலையை சிறிதளவு எடுத்து அரைத்து அந்தச் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது குணமாகும்.

No comments

Powered by Blogger.