அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு பலன்கள்

bairavar
சிவனின் அம்சமாக கருதக்கூடியவர் பைரவர் ஆவார் இவர் அகோர மூர்த்திகளில் இருந்து தோன்றியவர்.

மேலும் காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய கால பைரவரும் ஆவார்

இவ்வாறு சிறப்பு பெற்ற கால பைரவர் அருள் கிடைக்க அஷ்டமி திதியில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதே இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

sani 
ஏழரை நாட்டு சனி தொல்லையில் இருந்து விடுபட வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபட்டால் தொல்லை நீங்கும்.

மேலும் பைரவர் வணங்கினால் திருமணம் நடைபெறாமல் இருப்பது மற்றும் பிரம்மஹத்தி எனும் தோஷம் நீங்கி சௌபாக்கியங்கள் கிட்டும்.

பொதுவாகவே அஷ்டமி திதி வரும் நாட்களில் சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள் அது பைரவருக்கு உகந்த நாளாகும்.

இந்தத் திதியில் பைரவர் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு சிவப்பு நிற ஆடை கொடுத்து மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து அங்கிருக்கும் பக்தர்களுக்கு தானம் அளித்தால் பைரவரின் அருள் முழுமையாகக் கிட்டும் இதனால் செல்வ செழிப்புடன் வாழலாம்.

Bairavar
பைரவரை வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பில்லி சூனியம் ஏவல் கண்திருஷ்டி போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபட அஷ்டமி திதியில் பைரவ அஷ்டகத்தை படித்து கோவில் சென்று வழிபட்டு வந்தாள் இந்த பாதிப்புகளிலிருந்து பைரவர் நம்மை காப்பாற்றுவார்.

27 அஷ்டமி திதியில் பைரவரை வழிபட்டு தீபமேற்றி தானம் அளித்து வந்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

No comments

Powered by Blogger.