வீட்டில் வைக்கக்கூடாத தெய்வப் படங்கள் எவை என்று தெரியுமா

home pooja
தினமும் கோவில் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

அதேபோல் வீட்டிலும் கடவுளின் உருவ படங்களை வைத்து நாம் வழிபடுகின்றோம் அவ்வாறு இருக்கையில் எந்த கடவுளின் உருவப்படங்களை வைத்து வழிபடலாம் மற்றும் வைக்கக்கூடாது  என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சனீஸ்வரர் உருவ படங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது.

நவகிரங்களின் உருவப்படங்களை வைத்து பூஜை செய்யக்கூடாது.

அதேபோன்று ஆஞ்சநேயர் திருவுருவப் படத்தையும் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது

கடவுள் படங்களில்  உக்கிரமாக மற்றும் சன்னியாசி கோலத்தில் இருந்தால் வீட்டில் வைக்கக் கூடாது.

pooja
மேலும் அகோர மூர்த்தியாக விளங்கக்கூடிய காலபைரவர் திருஉருவப் படங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் வீடு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தினமும் ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக வைக்க வேண்டும் இப்படி இருந்தால் வீட்டில் வைத்து  வழிபடுவது சிறப்பு.

palani murugan
முருகப்பெருமான் சன்னியாசி கோலத்தில்  இருந்தால் மற்றும் தலைக்கு மேல் வேல் இருந்தால் அந்த உருவப்படங்களை வீட்டில் வைத்து வழிபட கூடாது.

அகோரமாக  இருகின்ற காளியம்மன் துர்க்கை மற்றும் சிவனின் ருத்ரதாண்டவ புகைப்படம் போன்றவை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது.

சாந்த குணம் நிறைந்த கடவுளின் திருவுருவப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மேலும் மன அமைதி மற்றும் குடும்ப ஒற்றுமையுடன்  செல்வ செழிப்பை கொடுக்கும்.

No comments

Powered by Blogger.