சகல சௌபாக்கியங்களும் அருளும் பாலமுருகன் திருக்கோயில்
murugan kovil |
புதுச்சேரி மாவட்டத்தில் காலப்பட்டு மாத்தூர் என்னும் ஊரில் பழமைமிக்க முருகன் பாலகன் வேடத்தில் தமது பக்தர்களுக்கு அருளை வழங்குகின்றார்.
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் கோயிலானது வெறும் காடாக இருந்துள்ளது ஏதோ ஒரு காரணத்திற்காக பள்ளம் தோண்டும் போது முருகனின் வேல் ஒன்று கிடைத்துள்ளது அதனால் அவ்விடத்தில் சிறிதாக கோவில் கட்டி மக்கள் வழிபடத் தொடங்கினர்.
மேலும் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை அடைந்து 2001 கோயில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
lord murugan temple |
இங்கு மூலவராக முருகன் குழந்தை வடிவில் இருக்கிறார்.
குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவில் சென்று வழிபட்டு மேலும் கோயிலில் இருக்கும் அரசமரத்தில் தொட்டில் கட்டி சென்றால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
naga dhosam |
இக்கோயில் காலையில் 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை நடை திறந்து இருக்கிறது.
இங்கே தைப்பூசம்,ஆடிக்கிருத்திகை,கார்த்திகை மாதம் போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றது மேலும் உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
Leave a Comment