கீழாநெல்லி தரும் அற்புத ஆரோக்கிய குணநலன்கள்

keelanelli
கீழாநெல்லி தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் பல்வேறு ஆரோக்கிய தன்மைகள் மேம்படும்.

கீழாநெல்லி வேரை காய வைத்து பொடியாக்கி வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் கர்ப்பப்பை  பிரச்சினைகள் குணமாகும்.

மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படும் அதன் வலியைப் போக்குவதற்கு கீழாநெல்லி இலையை அரைத்து அந்த சாற்றை குடித்தால் வலி விரைவில் குணமாகும்.

கீழாநெல்லி வேரை பசும்பாலுடன் கலந்து குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மேலும் கிருமிகளால் ஏற்படும் தொற்று பாதிப்புகளை வராமல் பாதுகாத்துக் கொள்ளும்.

keelanelli juice
கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குடித்து வந்தால் விஷப்பூச்சிகள் கடித்திருந்தால் அதன் விஷத்தை முறிக்கும்.

உடலில் எலி கடித்து இருந்தால் ஒரு கையளவு கீழாநெல்லி இலையை எடுத்து அதில் நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி கடித்த இடத்தில் தடவினால் மற்றும் அதன் சாற்றை குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலை தடுக்க கீழாநெல்லி இலையை கசக்கி அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தீர்வு காணலாம்.

keelanelli
நாம் சாப்பிடாமல் இருப்பதினால் வயிற்றில் புண் ஏற்பட காரணமாக அமைகிறது அந்த புண் குணமாக கீழாநெல்லி  இலையுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து குடித்துவந்தால் அந்த புண்கள் விரைவில் குணமாகும்.

உடலில் பல்வேறு ஆரோக்கியத்தையும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் தரக்கூடிய கீழாநெல்லி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பது நீங்களே உணர்வீர்கள்.

No comments

Powered by Blogger.