உடலுக்கு பல ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி

Coriander
கொத்தமல்லியை வீட்டிற்கு அருகில் எளிதாக வளர்க்க முடியும் மேலும் இதை வளர்க்க சிறிய அளவிலான தொட்டி இருந்தாலே போதுமானது.

கொத்தமல்லியில் எண்ணற்ற சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து நார்ச்சத்து கால்சியம் போன்ற அனைத்து விதமான ஆற்றல்களும் அடங்கி இருக்கின்றது.

இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கட்டுக்குள் வைத்திருக்கும்.

rasam
இதை வழக்கமாக சமையல் செய்யும் பொழுதில் ரசம்,சாம்பார் ,தயிர் சாதத்தில் ருசிக்கும் மட்டுமின்றி  ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.

வாதம் பித்தம் சரியாக வைத்திருக்க உணவில் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் உடலில் ஆரோக்கியம் மேம்படுகிறது.

உணவில் கொத்தமல்லியை சேர்த்துக் சாப்பிட காய்ச்சல் குறைகின்றது.

கொத்தமல்லியை உணவில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதினால் பசியை தூண்ட செய்கின்றது.

உடலில் வீக்கங்கள் இருந்தால் அதனை சரிசெய்ய கொத்தமல்லி இலையை எண்ணெயில் போட்டு வதக்கி வீக்கங்கள் இருக்குமிடத்தில் வதக்கிய கொத்தமல்லியை கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.

coriander thogayal
கொத்தமல்லி இலையை துவையல் செய்து சாப்பிட உடலில் பல்வேறு ஆரோக்கியத்தை பெற்று தரும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக தூண்டச் செய்யும்.

கர்ப்பம் தரித்த பெண்கள் தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவி செய்யும்.

கொத்தமல்லியில் எண்ணற்ற அற்புத நற்பலன்கள் அடங்கி இருக்கின்றது அதனால் உணவில் தினமும் சேர்த்து சாப்பிடுங்கள்.

No comments

Powered by Blogger.