வலம்புரி சங்கு வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்

sangu pooja
சங்கில்  இருவகையுண்டு வலம்புரி மற்றும் இடம்புரி ஆகும்.

 வலம்புரி சங்கை அபிஷேகம் செய்யும்போது பயன்படுத்துவார்கள் மேலும் பூஜையின்போது இடம்புரி சங்கு ஊதுவதற்கு பயன்படுத்துவார்கள்.

இந்த வலம்புரி சங்கு வீட்டில் வைத்து வழிபட்டால் உண்டாகும் அதிர்ஷ்ட நற்பலன்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

வலம்புரி சங்கு வீட்டில் வைத்து வழிபடும் போது நேர்மறையான ஆற்றல்கள் அதிகம் கிடைக்கின்றனர்.

மேலும் சித்ரா பௌர்ணமி அஷ்டமி ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வலம்புரி சங்கை பூஜை செய்யும் போது பலவிதமான நல்ல ஆற்றலை கொடுக்கிறது.

sangu pooja
சங்கை வைத்து அபிஷேகம் செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வலம்புரி சங்கில் அன்றாடம் சிறிது துளசி மற்றும் அதில் தண்ணீர் கலந்து சிறிது நேரம் வைத்து அதை பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு சங்கின் மூலம் பால் கொடுத்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

மேலும் இது ஆன்மீக ரீதியாக குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் பாதுகாத்துக்கொள்ளும்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் 14 செவ்வாய்க் கிழமைகளில் கோயில் சென்று வலம்புரி சங்கு மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் நற்பலன்களை கிடைக்கும்.

sangu
இந்த வலம்புரி சங்கின் மந்திரம்

" பாஞ்ச ஜன்யாயக வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்தோ சங்க ப்ரசோதயாத் "

சங்கை வீட்டில் வைத்தால் நன்மை மேலும் அதை  முறையான பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம் அதிகமான அதிர்ஷ்ட பலன்களை பெற முடியும்.

No comments

Powered by Blogger.