பூஜை செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்

lord shiva
வீடுகளில் துளசி வைத்து வளர்ப்பது நன்மை அளிக்கும் மேலும் இதை காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றி வழிபடுவது நற்பலன்களை பெற்று தரும்.

மேலும் நீங்கள் ஏதாவது தானம் கொடுக்க விரும்பினால் அந்தப் பொருட்களை எடுத்து சிறிதளவு துளசி அதில் வைத்து கொடுத்தால் சகல விதமான சௌபாக்கியங்களும் மகாலட்சுமி நமக்கு கொடுப்பார்கள்.

home pooja
வெள்ளி கிழமைகளில்  அன்று பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்தால் இறை அருள் பரிபூரணமாக கிட்டும்.

திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இருக்க வேண்டும் ஏனென்றால் முப்பெரும் தேவியர்  நெற்றி வகிட்டில் வாசம் செய்வதால் அங்கு குங்குமம் வைப்பது நற்பலன்களை தரும்.

மேலும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில்   வெண்ணெய் உருக்கக்கூடாது காரணம் என்னவென்றால் வெண்ணை மகாலட்சுமியின் அம்சமாக உள்ளது அதனால் வெண்ணை உருகினால் நம் வீட்டில் செல்ல கடாட்சம் முறுக்கி செல்வம் அற்ற நிலை வரும்.

கோவிலுக்கு சென்று ஒரு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்த வெற்றிலை பாக்கு மலர்கள் பழங்கள் மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

archanai
மேலும் கடவுளுக்கு அர்ச்சனை  செய்யும் போது வெற்றிலையை பாக்கை இரட்டைப்படை எண்ணிக்கையை வைத்து வழிபடுவது சிறப்பு.

பூஜை செய்யும்போது கவனம் பூஜை பற்றிய நினைப்பு மட்டுமே இருக்கவேண்டும் வேறு எந்த ஒரு யோசனை மற்றும் வெட்டிப் பேச்சுகள் போன்றவற்றை தவிர்த்து கவனம் செலுத்துவது சிறப்பு.

No comments

Powered by Blogger.